தேர்தலில் வாக்களிக்கும் முறைமை , வாக்களிப்பு நிலையங்களில் பின்பற்ற வேண்டிய விடயங்கள் - மஹிந்த தேசப்பிரியவின் விளக்கம்

05 Aug, 2020 | 06:47 AM
image

உச்சபட்ச பாதுகாப்புடன் வாக்களிப்பிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. எனவே பயமின்றி வருகை தந்து அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தலில் வாக்களிக்கும் முறைமை , வாக்களிப்பு நிலையங்களில் பின்பற்ற வேண்டிய விடயங்கள், வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பாக வைத்திருக்கும்முறை உள்ளிட்ட விடயங்கள் பற்றி தெளிவுபடுத்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் விடுத்த அறிவித்தலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அதில் அவர் மேலும் கூறுகையில் ,

வாக்களிப்பு நிலையங்கள்

வாக்களிப்பு நிலையங்களுக்கு முகக்கவசம் அணிந்து வருவது அத்தியாவசியமானதாகும். வாக்களிப்பு நிலையத்திற்கு வெளியிலும் உட்செல்லும் போதும் வாக்களித்த பின்னரும் செனிடைசர் மூலம் கைகள் கிருமி நீக்கப்படும். 

வாக்காளர்கள் வரும் போது கருப்பு அல்லது நீல பேனை கொண்டு வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறில்லையெனில் கிருமி நீக்கம் செய்யப்பட்ட பேனை அதிகாரிகளால் வழங்கப்படும். இவை மாத்திரமின்றி செல்லுபடியாகும் அடையாள அட்டையை எடுத்து வரவேண்டியது அத்தியாவசியமானதாகும்.

வாக்களிக்கும் முறை

அரசியல் கட்சிகளினதும் சுயேட்சை குழுக்களினதும் பெயர்கள் அவற்றிக்குரிய சின்னங்களுடன் மேல் பகுதியில் காட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு சின்னத்துக்கும் எதிரே ஒரு வெற்றுக்கூடு உள்ளது. வாக்காளர்கள் தாம் விரும்பும் எந்தவொரு கட்சிக்கோ அல்லது சுயேட்சை குழுவுக்கோ அதற்குரிய சின்னத்துக்கு எதிரேயுள்ள வெற்றுக்கூட்டினுள் அடையாளமிட முடியும். வாக்கினை அடையாளமிடும் போது விரும்பிய சின்னத்துக்கு எதிரேயுள்ள வெற்றுக் கூட்டினுள் புள்ளடியொன்றை (X) இட வேண்டும்.

ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒதுக்கப்பட்ட இலக்கங்கள் தேர்தல் மாவட்டத்திற்குள் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாக்குச்சீட்டின் கீழ்ப்பகுதியில் காட்டப்பட்டுள்ளன. விருப்புக்களை அடையாளமிடும் போது வாக்காளர்கள் விரும்பிய வேட்பாளரின் இலக்கத்தின் மீது புள்ளடியொன்றை (X) இட வேண்டும்.

எண்ணிக்கையில் மூன்றுக்கு மேற்படாதவாறு வேட்பாளர்களுக்கு அதாவது மூன்றுக்கு மேற்படாத எண்ணிக்கையான வேட்பாளர்களுக்கு அவர்களது இலக்கங்கள் மீது விருப்பு வாக்குகளை அடையாளமிட முடியும்.

ஒரு கட்சி அல்லது குழு சார்பாக வாக்கொன்று அடையாளமிடப்படாத வாக்குசீட்டு காணப்படுமாயின் அது செல்லுபடியற்றதாகவே கருதப்படுவதோடு அந்த வாக்கு நிராகரிக்கப்படும்.

முதலில் கட்சிக்கு எதிரே வாக்கினை பதிவு செய்ய வேண்டும் என்பதோடு அதன் பின்னரே விருப்புக்களை அடையாளமிட முடியும். வாக்களிப்பதற்கு புள்ளடியை (X) மாத்திரமே பயன்படுத்த முடியும்.

உச்சபட்ச பாதுகாப்புடன் வாக்களிப்பிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. எனவே பயமின்றி வருகை தந்து அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

வாக்குபெட்டிகளின் பாதுகாப்பு

கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகளின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு வாக்கெடுப்பின் மறு நாள் வாக்கெண்னும் பணிகளை நடத்த தீர்மானித்துள்ளதால் பொது மக்கள் மத்தியில் சந்தேகம் எழக்கூடும். அவ்வாறு சந்தேகிப்பதற்கான அவசியமில்லை. வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர் வாக்குபெட்டி பூட்டினால் மூடப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவினால் தயாகிக்கப்பட்ட இரகசிய குறியீடுகொண்ட நாடா ஒட்டப்பட்டு அதன் பின்னர் வாக்கெண்ணியோரின் விபரங்கள் அடங்கிய ஆவணம் பெட்டியின் மேல் ஒட்டப்படும்.

அதனைத் தொடர்ந்து பொலித்தீன் பையொன்றில் பெட்டியை இட்டு இரகசிய எண் கொண்ட நாடாவால் பொதியிடப்படும். இந்த படிமுறைகளை மீறி வாக்குபெட்டிகளில் எவராலும் வாக்குசீட்டுக்களை சேர்க்கவோ அல்லது மாற்றவோ முடியாது.

வாக்கெண்னும் நிலையங்களுக்கு அரசியல் கட்சிகள் அல்லது சுயாதீன குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி தலா இருவர் மாத்திரமே வருகை தர முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08