டிக்டாக் செயலியின்  அமெரிக்க உரிமத்தை அமெரிக்க நிறுவனத்திடம் செப்டம்பர் 15 ஆம் திகதிக்குள் விற்பனை செய்யவில்லை என்றால் அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும்  என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் டிக்டாக்கை வாங்கும் நிறுவனத்திற்கு குறிப்பிட்டத் தொகையை அரசின் பங்காக வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Donald Trump

இது குறித்து டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

டிக்டாக் செயலியை வாங்குவது தொடர்பாக மைக்ரோசாப்ட் தலைவர் சந்திய நாதல்லாவுடன் நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். 

இந்த செயலியை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பாதுகாப்பு காரணங்களுக்காக மிகவும் ஆபத்தான ஒன்று. ஆகையால் டிக்டாக் செயலியின் அமெரிக்க உரிமத்தை மைக்ரோசாப்ட் நிறுவனமோ அல்லது வேறு ஏதேனும் அமெரிக்க பெருநிறுவனமோ வாங்குவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என்றார்.

ஒருவேளை விற்பனை நடைபெறும் பட்சத்தில் அந்த விற்பனை ஒப்பந்தத்திற்கு உதவும் வகையில் டிக்டாக்கை வாங்கும் அமெரிக்க நிறுவனத்திற்கு குறிப்பிட்டத் தொகை அரசின் பங்காக வழங்கப்படும் என டிரம்ப்  தெரிவித்தார்.

அமெரிக்க நிறுவனங்கள் எவையும்  டிக்டாக் செயலியின் உறிமத்தை  வாங்கவில்லை என்றால் செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் அந்த செயலி அமெரிக்காவில் செயல்பட செய்யப்படும்..

அமெரிக்காவில் 80 மில்லியன் பயனாளர்களை கொண்ட டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் பட்ச்த்தில் டிக்டாக்கின் தாய் நிறுவனமான சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். 

இதனால் தடைக்கு  முன்னரே டிக்டாக் செயலியின் அமெரிக்க  உரிமத்தை விற்பனை செய்யும் முயற்சியில் பைட் டான்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.