கொரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி மருத்துவர்கள் சில விளக்கங்களை அளித்திருக்கிறார்கள்.

கொரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் காலகட்டம் வரை மது அருந்தக்கூடாது.  புகையிலைப் பொருட்களை பாவிக்கக் கூடாது. மருத்துவர் பரிந்துரையின்றி வேறு மருந்து, மாத்திரைகளை சாப்பிடக்கூடாது. தனிமைப்படுத்திக் கொண்டிருந்தாலும் மனதை இயல்பாக வைத்திருக்க வேண்டும்.

அதே தருணத்தில் கொரோனாத் தொற்றால் குணமடைந்தவர்கள், இரண்டு வார கால அவகாசத்திலிருந்து மூன்று மாதங்கள் வரை சுவை உணர் திறனும், நுகரும் திறனும் இயல்பாக இருக்கிறதா? என்பதை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். 

இதில் ஏதேனும் பாதிப்போ அல்லது குறைபாடோ இருந்தால் மீண்டும் அவர்கள் தங்களை பரிசோதித்துக் கொள்ளவேண்டும். ஏனெனில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இத்தாலி நாட்டவர்களை அண்மையில் பரிசோதனை செய்தபோது, அவர்களில் பலருக்கு சுவை உணர் திறன் மற்றும் திறன் குறைந்து இருப்பது கண்டறியப்பட்டது. 

இந்த பாதிப்பிற்கு சிலருக்கு ஆயுள் முழுவதும் நிவாரணம் தேவைப்படும். ஆதலால், உங்களுடைய சுவை உணர் திறன் மற்றும் நுகரும் திறன் குறித்து கண்காணிப்புடன் கூடிய மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

இதற்கு சித்த மருத்துவர்கள் விளக்கம் அளிக்கும் பொழுது,' மஞ்சள் தூளை சிட்டிகை அளவு எடுத்து மூக்குக்கு அருகில் கொண்டு செல்லும்போது அதன் வாசத்தை உங்களால் உணர முடிந்தால்... கொரோனா தொற்று குறித்த அச்சப்பட தேவையில்லை என்றும், மஞ்சளின் மணத்தை நுகர முடியவில்லை என்றால் பரிசோதனை அவசியம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பிறகு மருத்துவர்கள் பரிந்துரைத்த வழிகாட்டுதலையும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான உணவு பழக்க வழக்கத்தையும் மேற்கொள்ளவேண்டும். இதன்மூலம் கொரோனா தொற்று மீண்டும் ஏற்படுவதை தடுக்க இயலும்.

டொக்டர் ராஜலிங்கம்