லெபனான் தலைநகரின் துறைமுகப் பகுதியில் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

Image

சற்று முன்னர் பெய்ரூட்டை உலுக்கிய இவ் வெடிப்பு சம்பவம் காரணமாக நகரம் முழுவதும் உள்ள கட்டிடங்களில் கதவுகளும் ஜன்னல்களும் வெடித்துச் சிதறியதுடன் புகை மண்டலம் மேல் எழுவதை  காணொளி காட்சிகள் காண்பிக்கின்றன.

பெய்ரூட்  துறைமுகத்தில் ஹெஸ்பொல்லா ஆயுதக் கிடங்கை குறிவைத்து இவ் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 Beirut, Lebanon

இதுவரை வெளியான தகவல்களின் படி, 15 நிமிட இடைவெளியில் இரண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன, ஒன்று துறைமுகத்திலும் மற்றொன்று நகரத்திலும் பதிவாகியுள்ளது.

Image

தாக்குதல் தொடர்பில்  இடிந்து விழுந்த கட்டிடங்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன, மேலும் பரந்த அளவில் பெரும் சேதம் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.  இதுவரை பத்து பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளததகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

Copy-of-2020-08-04T160812Z_1829449354_RC237I9LI75L_RTRMADP_3_LEBANON-SECURITY-BLAST

Copy-of-Lebanon_Explosion_76073Copy-of-363769416_0-6Copy-of-363769425_0-6Copy-of-401404-01-02