ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் உள்ள மிகப்பெரிய சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐ.எஸ். பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் சிறை காவலர்கள் மற்றும் கைதிகள் உள்பட 29 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 50 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

At least 29 people including civilians, guards and prisoners have been killed after ISIS attacked a jail in Afghanistan, sparking a day-long firefight

கடந்த சனிக்கிழமை ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான அசாத்துல்லா ஓராக்சாய் என்பவரை அந் நாட்டு இராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.

இதற்கு பழிதீர்க்கும் விதமாக குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ISIS blew up the prison in Jalalabad on Sunday evening before fighters streamed inside and occupied it, firing at Afghan security forces who managed to retake the prison on Monday

நேற்று முன்தினம் மாலை ஐ.எஸ்.  பயங்கரவாத இயக்கத்தின்  தற்கொலைப் படையைச் சேர்ந்த  பயங்கரவாதி  வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்து  சிறைச்சாலையின் நுழைவாயில் மீது மோதி வெடிக்கச் செய்துள்ளார். பயங்கர வெடிப்பு சத்தத்துடன் இவ் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதை தொடர்ந்து. அங்கு பல கார்களில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள் கண்ணில் படுபவர்களையெள்ளம் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே சிறைச்சாலைக்குள் நுழைந்துள்ளனர்.

இத் தாக்குதலின் போது 1000 மேற்பட்ட சிறை கைதிகளை ஐ.எஸ். பயங்கரவாதிகள் விடுவித்துள்ளனர். 

இதையடுத்து சிறை காவலர்கள் பதில் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இரு தரப்புக்கும் இடையேயான தாக்குதல் நேற்று காலை வரை நீடித்ததையடுத்து இராணுவத்தினர் சிறையை மீண்டும் தமது கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் சண்டையின்போது குறைந்தது எட்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Around 1,350 of the jail's 1,800 inmates - including ISIS fighters - escaped during the raid, with 1000 recaptured and more than 300 still missing

இதேவேளை, இந்த தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

சிறைச்சாலையின் 1,800 கைதிகளில் ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் உட்பட 1,350 பேர் வரை தப்பியிருப்பதாக  கருதப்படுகிறது, மேலும் 300 க்கும் மேற்பட்ட கைதிகளை காணவில்லை எனவும். 400 பேர் சிறையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

The bloody attack came a day after the Afghan government announced it had killed a senior ISIS commander near Jalalabad

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அந்த நாட்டு இராணுவத்துக்கும் இடையே 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.  இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

இதன் பலனாக கடந்த பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்க அரசுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இருந்த போதும் தலீபான் பயங்கரவாதிகள் ராணுவத்தினரையும், போலீசாரையும் குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை இலக்காக வைத்து கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.