அமெரிக்காவின் வயோமிங்கில் மூன்று பரசூட் பலூன்கள் தரையில் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

ஒவ்வொரு பலூனும் மேற்கு வயோமிங்கின் டெட்டன் கிராமத்தில் அந் நாட்டு நேரப்படி திங்கட்கிழமை காலை 8 மணிக்கு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூன்று பலூன்களிலும் மொத்தமாக 36 பேர் பயணித்துள்ள நிலையில் 20 பேர் வரை காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்பாராத விதமான கடும் காற்று காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.