ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிரேமலால் ஜயசேகர மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது பிரசார கூட்டமொன்றில் துப்பாக்கிச் சூட்டினை நடத்தி ஒருவரை கொலை செய்ததோடு மேலும் இருவருக்கு காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக பிரேமலால் ஜயசேகரவிற்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் கடந்த வாரம் மரண தண்டனை விதித்து தீர்பளித்தது.

இந் நிலையில் அந்த தீர்ப்பினை இரத்து செய்யக் கோரிய அவரது சட்டத்தரணி இந்த மனுத் தாக்கலை செய்துள்ளார்.