வெறுக்கத்தக்க பேச்சுக்களை களைவோம்

By J.G.Stephan

04 Aug, 2020 | 05:11 PM
image

மனிதன் சமிஞ்சைகள் ஊடாக ஆரம்பித்த தொடர்பாடலானது மொழி, எழுத்து என மாற்றமடைந்து இன்று இலத்திரனியல் வரை பரிணமித்திருக்கின்றது. உள்ளங்கையிலடங்கி விடுகின்ற வரை வியாபித்திருக்கின்ற தொடர்பாடல் மற்றும் அதன் வளர்ச்சி போன்றே அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் சமூகத்திலான தாக்கங்களையும் கூட அதிகரிக்கச்செய்திருக்கின்றது.

அதிலும் குறிப்பாக சமூக ஊடகங்கள் வளர்ச்சி இத்தகைய முரண்பாடுகளை ஏற்படுத்துவதில் முதலிடம் வகிக்கின்றன என்றே கொள்ளலாம். குறித்த சமூகம் அல்லது குழுவினரை குறித்து முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்கள், செய்திகள், பதிவுகள் என்பவற்றில் வெறுக்கத்தக்க பேச்சுக்களை இனங்காணலும் அவற்றை சட்டரீதியாக அணுகுதலும் அவற்றிற்கான பதிலளித்தல்களும் இவற்றின் வகிபாகங்கள் குறித்தும் கவனம் செலுத்துவதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கமாகும்.

வெறுக்கத்தக்க பேச்சுக்கள் (Hate Speech) என்றால் என்ன?

பொதுவாக சொல்லப்படுகின்ற விடயம் அல்லது பரப்பப்படுகின்ற செய்திகள், தகவல்கள் பின்வரும் தன்மைகளை உள்ளடக்கியதாக இருப்பின் அவை வெறுக்கத்தக்க பேச்சுக்கள் என கருதப்படும்.

· முரணான புரிந்துரையொன்றிற்காக ஆதரவினை கோரிநிற்றல்

· பகையுணர்சியுடனான அவமானங்களை தோற்றுவிக்க கூடியதான சொல்லாடல்கள்

· வன்முறைக்கு தூண்டலான சொல்லாடல்கள்

· பொதுத்தளம் ஒன்றில் பகிரப்படுகின்ற முரணான விளைவுகளை தோற்றுவிக்கின்ற

சொல்லாடல்கள்

· தனி நபர் அல்லது குறிப்பிட்ட சமூகத்தின் இயல்புகள்ரூபவ் பழக்கவழக்கங்கள், இயலாமைகளை சுட்டிக்காட்டுவதான சொல்லாடல்கள்

(உதாரணம் இனம், பால், சாதி, பாலின அடையாளம்…..)

இவற்றில் குறைந்தது இரு இயல்புகளை கொண்டிருப்பின் அவை ‘வெறுக்கத்தக்க பேச்சுக்கள் என கருதப்படும். சில சொல்லாடல்கள் நேரடியான வெறுக்கத்தக்க பேச்சுக்களாக அமையாவிடினும் முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கான கருவினை மறைமுகமாக உள்ளடக்கியதாக அமையும்.

வெறுக்கத்தக்க பேச்சுகளுக்கெதிரான சட்டங்களும் நடவடிக்கைகளும் இலங்கை அரசானது இரு சர்வதேச உடன்படிக்கைகளில் கைசாத்திட்டுள்ளதன் மூலம் முரண்பாடகளை தோற்றுவிப்பதான சொல்லாடல்கள் உள்ளடங்கலான விடயங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு உடன்பட்டுள்ளது.

1. 1969 ஆம் ஆண்டு கைச்சாத்திட்டுள்ள ‘அனைத்து வகையான இனப்பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை (The international Convention on the Elimination of all Forms of Racial Discrimination)இவ் உடன்படிக்கையின் நான்காவது பிரிவில் பின்வரும் விடயங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.

· இன ரீதியான முரண்பாடுகளை தோற்றுவிக்கக்கூடிய கருத்துக்களை பரப்புதல்

· இனப்பாகுபாட்டினைத் தூண்டுதல்

· குறிப்பிட்ட இனத்தவர்களுக்கெதிராக வன்முறைகளை மேற்கொள்வது அல்லது வன்முறைகளை தோற்றுவிக்கக்கூடிய தூண்டுதல்கள்

2. சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை ( The International Convention on Civil and Political Rights – ICCPR) இவ் உடன்படிக்கையின் 20 ஆவது பிரிவில் இரண்டாவது அத்தியாயத்தில்

‘தேசிய இன, மத பாகுபாடு, மற்றும் விரோதங்களை பாராட்டுதல் மற்றும் வன்முறைகளைத் தூண்டும் வகையிலான விடயங்களுக்கு ஆதரவளிப்பது சட்டத்தினால் தடைசெய்யப்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையின் உள்நாட்டுச் சட்டத்திலும் இத்தகைய வெறுக்கத்தக்க சொல்லாடல்கள் உடான தூண்டுதல்களுக்கெதிரான தடைசெய்யப்பட வேண்டிய விடயங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. அவையாவன

· கருத்துச் சுதந்திரம் சார் கட்டுப்பாடுகள் - பிரிவு 15(2) ற்கமைய ‘இன, மத நல்லிணக்கத்திற்கும்  பாராளுமன்றம் மற்றும் நீதிமன்ற செயற்பாடுகளுக்கும் அவதூறு விளைவித்தல்ரூபவ் எதிரான வன்முறைகளை தூண்டுதல்கள் குற்றம் என கருதப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

· கருத்துச் சுதந்திரம் சார் கட்டுப்பாடுகள் - பிரிவு15(7) ற்கமைய தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு, பொது சுகாதாரம், பிறரின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குதல் மற்றும் மதிப்பளித்தல் பொதுநலனுக்கான அடிப்படைத் தேவைகளை வழங்குதல் ஜனநாயகத்தின் முக்கிய அம்சங்களாகும் என குறிப்பிடுகின்றது.

· சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) பிரிவு 3(1) இல் எந்தவொரு நபரும் போருக்கு ஆதரவாகவோ இன. மத வெறுப்பினை அல்லது வன்முறையை தூண்டும் விடையங்களுக்கு ஆதரவாகவோ செயற்படக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சட்டங்களின் அடிப்படையில் அரசானது சில நடவடிக்கைகளினை மேற்கொள்ள வேண்டிய கடப்பாட்டிற்குள்ளாகின்றது.
1. வன்முறை மற்றும் முரண்களை தோற்றுவிக்கும் செயற்பாடுகளை தடைசெய்தல்

2. மக்களின் கருத்துச் சுதந்திர மற்றும் செயற்பாடகளுக்கான உரிமைகளை

வழங்குகின்றதுடன் அவை ஊடாக ஏனையவரின் உரிமைகள் பாதுகாக்கப்படுதலை உறுதிசெய்தல்

3. முரண்பாடுகளை தூண்டுவதான கருத்துக்கள், சொல்லாடல்களை தடைசெய்தல்

4. பாதிப்புக்களை தோற்றுவிக்க கூடிய சொல்லாடல்களுக்கெதிராக குற்றவியல்

நடவடிக்கைகளற்ற சிவில் நடவடிக்கைகள் அல்லது தடைகளை விதித்தல்.

ஆயினும் இலங்கையில் இன்று வரை பாராளுமன்றம் முதல் பெரும்பாலான அரச சார் உரைகளாயினும் பிரசாரங்களாயினும் இன மற்றும் மதம்சார் முரண்களை தோற்றுவிக்கும் வகையிலேயே கட்சி உறுப்பினர்களும் அரச அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் தமது சொல்லாடல்களினூடு முன்னெடுக்கின்றனர். உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டிருந்தும் சட்டங்களை உருவாக்கியிருந்தும் சட்ட நடவடிக்கை என்பது முன்னெடுக்கப்படாமலேயே உள்ளது.

மேலும் சட்டங்கள் என்பதைத் தாண்டி ஆறறிவு படைத்தவர்கள் என்ற வகையில் எம் ஒவ்வொருவருக்கும் கூட சில சமூகம் சார் கடமைகள் உண்டு.

§ வெறுக்கத்தக்க சொல்லாடல்களை இனங்கண்டு, அடையாளப்படுத்துவதுடன் மக்களிடையே இது பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தல்.

§ ஆதாரமற்ற அனுமானங்களையும் முரண்களை தோற்றுவிக்கும் கருத்துக்கள் குறித்தும் பகுப்பாய்வு செய்தல் வேண்டும்

§ முரண்களை தோற்றுவிக்கும் சொல்லாடல்களுக்கு எதிராக ஆதாரத்துடனான பதிலளித்தல் வேண்டும்.

§ சமூக தளங்களில் இவ்வாறான கருத்துக்கள் மற்றும் தூண்டல்கள் பரப்பப்படுமிடத்து அது குறித்து புகாரளித்தல் வேண்டும்.

§ முரண்களுக்கான தூண்டல்கள் இனங்காணப்படுமிடத்து பொருத்தமான சட்ட கட்டமைப்பு சார் அமைப்புக்களை தொடர்புகொள்ளல் வேண்டும்.

§ அந்தரங்கங்கள் சார் விடயங்களுக்கு மதிப்பளித்தல் வேண்டும் இதேவேளை ஊடகங்களும் இத்தகைய வெறுக்கத்தக்க பேச்சுக்கள் குறித்து ஊடக கண்காணிப்பினை மேற்கொள்வதுடன் இவை குறித்த அறிக்கையிடல்களையும் மேற்கொள்ள வேண்டும். அது மட்டுமன்றி துல்லியமான அறிக்கையிடலிலும் ஊடகங்கள் கவனஞ்செலுத்தல் வேண்டும்.

நாட்டின் சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு பிரஜைகளும் ஊடகங்களும் விழிப்புணர்வுடன்

செயற்பட்டால் எதிர்காலம் வன்முறையற்றதாக அமைய அத்தியாவசியமானதும் கூட.

- ஜெ. கேஷாயினி எட்மண்ட்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right