சர்வதேச இணையத்தளமான அல்ஜசீராவின் கோலாலம்பூர் அலுவலகத்தில் மலேசிய காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த சோதனை நடவடிக்கையில் இரண்டு கணினிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
மலேசியாவில் அதிகாரிகள், செவ்வாய்க்கிழமையன்று அல் ஜசீராவை தேசத் துரோகம், அவதூறு மற்றும் நாட்டின் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகம் சட்டத்தை மீறியதாக முன்வைத்த குற்றச்சாட்டையடுத்து இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அல் ஜசீரா ஆங்கிலத்தின் நிர்வாக இயக்குனர் கில்ஸ் ட்ரெண்டில் இது தொடர்பில் கூறுகையில்,
எங்கள் அலுவலகத்தில் ஒரு சோதனையை நடத்துவதும், கணினிகளைக் கைப்பற்றுவதும் ஊடக சுதந்திரத்தை அதிகாரிகளின் ஒடுக்குமுறையில் தொந்தரவு செய்வதோடு ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது என்றார்.
ஜூலை 3 ஆம் திகதி ஒளிபரப்பான லொக் அப் இன் மலேசியன்ஸ் லொக் டவுன் (Locked Up in Malaysia's Lockdown) என்ற ஆவணப்படம் தொடர்பாக அல்ஜசீராவின் ஏழு ஊடகவியலாளர்களை மலேசிய பொலிஸார் விசாரித்த சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு இந்த சோதனை நடந்துள்ளது.
அப்போதிருந்து, அல் ஜசீரா அதன் ஊழியர்களும் ஆவணப்படத்தில் நேர்காணல் செய்யப்பட்ட நபர்களும் துஷ்பிரயோகம், மரண அச்சுறுத்தல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அவர்களின் தனிப்பட்ட விவரங்களை வெளிப்படுத்தியதை எதிர்கொண்டதாக கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM