குமரன்கடவல தவுல்வெவ வனப்பகுதியில் சட்டவிரோத தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட 6 பேரை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று குறித்த சந்தேக நபர்களை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்டிருந்த குறித்த சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று (08) கைதுசெய்திருந்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 28 தொடக்கம் 56 வயதான கலன்பிந்தநுவர, உரபொல மற்றும் குமரன்கடவல  பகுதியை சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து பல சமயங்களின் தொல்பொருட்கள் மற்றும் தொல்பொருள் ஆய்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.