வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் ஆசிர்வாத பூஜையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நேற்று (03) பிற்பகல் பங்குபற்றினார்.

ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை தேவாலயத்திற்கு பொறுப்பான நிலமேக்கள் வரவேற்றனர்.

அங்கு இடம்பெற்ற பூஜை நிகழ்விலும் சமயக் கிரியைகளிலும் ஜனாதிபதி அவர்கள்

பங்குபற்றினார். எசல பெரஹர நிறைவு விழாவை முன்னிட்டு ஜனாதிபதி இன்று (04) முற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் நாக மரக்கன்றொன்றையும் நாட்டினார்.

ஜனாதிபதியும் அயோமா அம்மையார்யும் நேற்று இரவு எசல பெரஹரவை பார்வையிட்டனர்.