நடிகர் தனுஷுடன் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிகை ஹன்சிகா மோத்வானி இணைந்து நடிக்கிறார்.

யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன், குட்டி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஜவஹர் மித்ரன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக தனுஷ் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் சார்பில் தயாராகும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகையான ஹன்சிகா மோத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ் திரை உலகில் தனுஷ் நடித்த 'மாப்பிள்ளை' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 50 படங்களில் நடித்து  முன்னணி நடிகையாக உயர்ந்தார். 

தற்போது ஒன்பது ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தனுஷுடன் இணைந்து நடிக்கிறார். இந்தப்படத்தில் ஹன்சிகா மோத்வானி இரண்டாவது நாயகியாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இதனிடையே நடிகை ஹன்சிகா மோத்வானி சிம்புவுக்கு ஜோடியாக 'மகா' என்ற படத்திலும், வெங்கட் பிரபு தயாரிப்பில் 'பார்ட்னர் ' என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.