அநிருத்த சம்பாயோவின் கைதை தொடர்ந்து மேலும் சிலருக்கு வலைவிரிக்கும் பொலிஸார்!

03 Aug, 2020 | 11:24 PM
image

(நா.தனுஜா)

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் குற்றவிசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கு அமைவாக நேற்று அநிருத்த சம்பாயோ என்ற சிறைச்சாலை அதிகாரி குருணாகலைப் பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக்குழுக்களினால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பதில் பொலிஸ்மாதிபர் ஆகியோருக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட ஆலோசனையைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சட்டவிரோத நடவடிக்கைகள் கண்டறியப்பட்டன.

இதுதொடர்பில் விசேட செயலணியொன்றும் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் ஆலோசனையைத்  தொடர்ந்தே  இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு அடிப்படையாக அமைந்த முதலாவது தகவல் மேமாதம் 26 ஆம் திகதி கிடைக்கப்பெற்றது. அதனைத்தொடர்ந்து இதுபற்றி உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ்மாதிபரால் வழங்கப்பட்ட உத்தரவிற்கமைவாகக் குற்ற விசாரணைப் பிரிவினரால் மேமாதம் 30 ஆம் திகதி இது குறித்த விசாரணைகள் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன. அந்த விசாரணைகள் மூலமாக இதுவரையில் சிலர் கைது செய்யப்பட்டுமிருக்கிறார்கள்.

அத்தோடு மேலும் 4 சந்தேகநபர்கள் அடையாளங்காணப்பட்டிருப்பதுடன் அவர்கள் எம்.யு.சரத் பண்டார, டி.எம்.என்.சேனாரத்ன, கே.ஏ.பி.ஏ.களுவக்கல ஆகியோரே அவர்களாவர். அத்தோடு ஐந்தாவதாக அநிருத்த சம்பாயோ என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர்களனைவரும் சிறைச்சாலை அதிகாரிகளாவர்.

போதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருக்கும் குற்றச்சாட்டின் பேரில் கைதாகி சிறையிலிருப்பவர்களின் அறைகளுக்கு விசேட வசதிகளைப் பெற்றுக்கொடுத்தமை, அந்த வசதிகளை சட்டத்திற்கு முரணான வகையில் பொய்யான ஆவணங்களைத் தயார்ப்படுத்தி அவற்றினூடாகப் பெற்றுக்கொண்டமை, பொய்யான நிதி மதிப்பீடுகளை வழங்கியமை மற்றும் இக்குற்றங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியமையும் சதித்திட்டம் தீட்டியமையும் ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழேயே இந்த சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் நேற்று கைதுசெய்யப்பட்ட அநிருத்த சம்பாயோ புலனாய்வுப்பிரிவினரின் தகவலுக்கமைவாக விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலமாகவே குருணாகலைப் பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டார். மேலும் இந்த தேடுதல் நடவடிக்கையின் ஊடாக இரு கதவுகளைக்கொண்ட குளிர்சாதனப்பெட்டி, மைக்ரோவேவ் அடுப்பு, இரண்டு ரைஸ் குக்கர்கள் மற்றும் மேலும் பல ஆவணங்கள் ஆகியவற்றைப் பொலிஸார் கைப்பற்றியிருக்கின்றனர்.

 அதேவேளை சிறைச்சாலை கைதிகளுக்கு நவீன வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதில் சட்டவிரோதமாக சொத்துக்கள் அல்லது நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

6 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

2025-03-19 11:55:55
news-image

பராமரிப்பற்ற நிலையில் வவுனியா புதிய பேருந்து...

2025-03-19 11:48:53
news-image

ஏறாவூர் பகுதியில் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம்...

2025-03-19 11:10:32
news-image

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல்...

2025-03-19 11:07:05
news-image

நகை கடையிலிருந்து தங்கச் சங்கிலிகளை திருடிச்...

2025-03-19 11:12:28
news-image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள்...

2025-03-19 11:09:33
news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 11:37:11
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:59:36
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

2025-03-19 09:23:29
news-image

இராமேஸ்வரம் மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையால்...

2025-03-19 11:35:02
news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-19 09:25:20