நாட்டில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து இன்று நாட்டில் ஐந்து பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

சவுதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய நால்வருக்கும், கந்தக்காடு தொற்றாளருடன் தொடர்பை பேணிய ஒருவருக்குமே  இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை  2,828 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 2,517 பேர் குணமடைந்துள்ளதோடு , 300 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்கை பெற்று வருகின்றனர். 

இதேவேளை, 50 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் நாட்டில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.