(இராஜதுரை ஹஷான்)

இடம் பெறவுள்ள  பொதுத்தேர்தலின்  பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு  நாடு தழுவியர ரீதியில்  பொலிஸ்  மற்றும் சிவில்  பாதுகாப்பு  தரப்பினர் உட்பட  69000ஆயிரம் பேர்  பாதுகாப்பு  நடவடிக்கைகளில் ஈடுப்படவுள்ளார்கள்.         

அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கான   நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டுள்ளன.  சட்ட ஒழுங்கினை   பாதுகாக்க  அதிகாரத்தை  முழுமையாக    செயற்படுத்த ஒருபோதும்  பின்வாங்க மாட்டோம்.   என  தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான  பொலிஸ் அதிகாரியான   சிரேஷ்ட   பிரதி பொலிஸ்மா அதிபர்   பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

அரசாங்க  தகவல் திணைக்களத்தில்  இன்று  இடம் பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில்  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வாக்களிப்பு மத்திய நிலையங்கள் மற்றும்  வாக்களிப்பு   சூழல் , வாக்கு  எண்ணும் நடவடிக்கைகள்,  உட்பட  வீதி போக்குவரத்து பாதுகாப்பு ஆகியவற்றுக்கு    பொலிஸார்,  சிவில்  பாதுகாப்பு  தரப்பினர் சேவையில் ஈடுப்படவுள்ளார்கள். ஒட்டு மொததமாக 69000 ஆயிரம் பேர்  நாடு தழுவிய ரீதியில்   பாதுகாப்பு நடவடிக்கைளில் ஈடுப்படுவார்கள்.

தேர்தல்  தொடர்பான  பாதுகாப்பு மற்றும் சிவில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர் இணைத்துக்கொள்ளப்படவில்லை.   பொலிஸ் நிலைய மற்றும் வீதி   காவலரண் பாதுகாப்புகளுக்கு மாத்திரமே   இராணுவத்தினர்   இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.

  தேர்தல் வன்முறை  மற்றும்  தேர்தல்  சட்ட மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு  கட்சி பேதமின்றி      வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்  அவர்களுக்கு எதிரான உரிய சட்ட நடவடிக்கை  எடுக்கப்படும். ஜனநாயக ரீதியில்   தேர்தல்  இடம் பெறுவதற்கு பொறுப்புடன் செயற்படுவோம். சட்ட ஒழுங்கினை  பாதுகாப்பதற்கு  வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை முழுமையாக செயற்படுத்த  ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்   என்றார்.