கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குப் புலனாய்வுத்துறையைப் பயன்படுத்திய ஒரே நாடு இலங்கை - பாதுகாப்புச் செயலாளர்

03 Aug, 2020 | 06:34 PM
image

(நா.தனுஜா)

நாட்டின் ஓரங்கமாகத் தொழிற்படும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் புலனாய்வுத்துறையைப் பயன்படுத்தியதன் விளைவாக கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் மிகுந்த சவால்மிக்க பணியில் இலங்கை வெற்றியீட்டியிருக்கிறது என்பதுடன், உலகில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குப் புலனாய்வுத்துறையைப் பயன்படுத்திய ஒரேயொரு நாடு இலங்கை மாத்திரமாகத்தான் இருக்கும் என்று பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

Image may contain: 2 people, people standing

மிலிந்த ராஜபக்ஷவினால் எழுதப்பட்ட 'கொரோனா டையரி 2020' என்ற புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வு கடந்த வாரஇறுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்குப் போராடும் அனைத்து முன்னணி வீரர்களுக்கும் இந்தப் புத்தகத்தை சமர்ப்பணம் செய்யவேண்டும் என்று

குறிப்பிட்டார். மேலும் அங்கு கூறியதாவது:

அனைத்து வளர்ந்த நாடுகளும் கொடூரமான கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முன்னாள் மண்டியிட்டிருந்தபோது, எமது தேசமும் அந்த நோயை அச்சத்துடன் எதிர்கொண்டது. எனினும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் வெற்றிகரமான திட்டங்களின் ஊடாக அதிலிருந்து விடுபடமுடிந்தது.

கொடிய வைரஸ் பரவலைத் திறம்படக் கட்டுப்படுத்த முடியும் என்பதில் இலங்கை ஏனைய நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கின்றது. இந்தப் பாரிய சவாலை முறையானதும், திட்டமிடப்பட்ட வழிமுறைகள் மற்றும் செயற்திட்டங்கள் ஊடாக எதிர்கொள்வதற்கு வழிகாட்டிய பெருமை நாட்டின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவையே சாரும்.

நாட்டில் கொரோனா வைரஸினால் எந்தவொரு நபரும் பாதிக்கப்படாத நிலை காணப்பட்டபோது, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினால் வைரஸ் பரவலை எதிர்கொள்ளல் மற்றும் கட்டுப்படுத்தல் ஆகிய நோக்கில் விசேட ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்பட்டது. வைரஸ் தொற்றிலிருந்து நாட்டின் பிரஜைகளைப் பாதுகாப்பதற்கு சுகாதாரத்துறையினர் மாத்திரமன்றி முப்படையினர், பொலிஸார், புலனாய்வுப்பிரிவினர் மற்றும் அரச கட்டமைப்புக்கள் அனைத்தும் கூட்டாக இணைந்து பங்களிப்பு வழங்கியிருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் பரவல் 'இனம்' சார்ந்து மேற்கோள் காட்டப்பட்ட வேளையில், அதனால் குறித்த இனத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட முன்னர் நாட்டின் புலனாய்வுப்பிரிவனர் உரிய நடவடிக்கை எடுத்து, அச்சமூகத்தைப் பாதுகாப்பதற்கு வழியேற்படுத்தினர். சுகாதார அதிகாரிகள் மற்றும் புலனாய்வுத்துறை சேவைகளின் ஒத்துழைப்புடன் அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை முடக்கியதோடு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் என்று சந்தேகிக்கக்கூடிய நபர்கள் மற்றும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் நாட்டின் ஓரங்கமாகத் தொழிற்படும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் புலனாய்வுத்துறையைப் பயன்படுத்தியதன் விளைவாக கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் மிகுந்த சவால்மிக்க பணியில் இலங்கை வெற்றியீட்டியிருக்கிறது என்பதுடன், உலகில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குப் புலனாய்வுத்துறையைப் பயன்படுத்திய ஒரேயொரு நாடு இலங்கை மாத்திரமாகத்தான் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல்கலைக்கழக மாணவர்கள் பலவந்தமாக போராட்டங்களுக்கு அழைத்துச்...

2022-10-05 16:29:29
news-image

புகையிரத திணைக்கள காணிகளை சட்டவிரோதமாக உபயோகிப்போருக்கு...

2022-10-05 16:44:13
news-image

பல்கலைக்கழகங்களில் வன்முறைக்கு இடமளிக்க முடியாது -...

2022-10-05 16:45:38
news-image

ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சர்வதேச விசாரணை பொறிமுறையாக...

2022-10-05 16:52:42
news-image

பேருவளை- தர்காநகர் பகுதிகளில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத...

2022-10-05 16:35:06
news-image

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல்...

2022-10-05 16:19:31
news-image

கொழும்பு - கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூட்டு :...

2022-10-05 16:15:06
news-image

தொலைபேசிக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கும்

2022-10-05 16:38:33
news-image

நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்காெள்ளுமாறு சபாநாகருக்கு அறிவுரை...

2022-10-05 14:40:02
news-image

5 மணிநேர நடவடிக்கையின் பின் பாதுகாப்பாக...

2022-10-05 16:36:12
news-image

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில்...

2022-10-05 13:25:41
news-image

சர்வதேச அழுத்தம் மூலம் தமிழர்களுக்கு தேவையானவற்றை...

2022-10-05 15:54:54