அடுத்த கட்டம் என்ன?

Published By: Priyatharshan

03 Aug, 2020 | 12:19 PM
image

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் யாவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளன.  அதனைத்தொடர்ந்து அமைதிக் காலம் ஆரம்பமாகியுள்ளது. 

இதன் அடுத்த கட்டமாக 5 ஆம் திகதி வாக்குப்பதிவு இடம்பெறும். நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் நாடளாவிய ரீதியில் 22 தேர்தல் மாவட்டங்களில் மொத்தமாக 7452 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

கொழும்பில் அரசியல் கட்சிகள் சார்பில் 352 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 572 வேட்பாளர்களும் யாழில் அரசியல் கட்சிகள் சார்பில் 110 வேட்பாளர்களும் சுயாதீன குழுக்கள் சார்பில் 80 வேட்பாளர்களும் வன்னியில் அரசியல் கட்சிகள் சார்பில் 153 வேட்பாளர்களும் சுயாதீன குழுக்கள் சார்பில் 252 வேட்பாளர்களும் மட்டக்களப்பில் அரசியல் கட்சிகள் சார்பில் 128 வேட்பாளர்களும் சுயாதீன குழுக்கள் சார்பில் 176 வேட்பாளர்களும் போட்டியிடவுள்ளனர் .

கடந்த சில தினங்களாக நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது அரசியல்வாதிகள் ஏட்டிக்குப் போட்டியாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தனர். 

அதுமாத்திரமன்றி  தாங்கள் தெரிவு செய்யப்பட்டால் நாட்டிற்கும் மக்களுக்கும் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் வாக்குறுதிகளை தாராளமாக வழங்கியுள்ளனர். ஒவ்வொரு தேர்தலின் போதும் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்குறுதிகளை அள்ளி வழங்குவது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

இதேவேளை எந்தக் கட்சி அதிகூடிய இடங்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடும் என்ற பொதுவான கருத்து கணிப்பு க்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன.  எனினும் எந்த கட்சியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறும் என்று எதிர்பார்க்க முடியாத நிலையிலேயே கருத்துக்கணிப்புகள் உள்ளன . 

இதேவேளை சில அரசியல் கட்சிகள் இடையே ஏற்பட்டுள்ள பிளவுகளும் விருப்பு வாக்கின் அடிப்படையில் ஒரே தரப்புக்குள் ஏற்பட்டுள்ள போட்டாபோட்டியும் அதன் வாக்கு வங்கியை மோசமாகப் பாதித்துள்ளதாக கூறப்படுகின்றது.

எவ்வாறெனினும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாக அமையப்போகின்றது . மக்கள் மிகவும் நிதானமாக சிந்தித்து தாங்கள் விரும்பும் வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டும்.

உண்மையான சேவை செய்யும் நோக்கம் கொண்ட மக்கள் பிரதிநிதிகள் யார்  ? என்பதை மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். எனவே அநாவசியமாக மக்களை குழப்பும் காரியங்களிலோ அன்றேல் அவர்களுக்கு அசௌகரியம் கொடுக்கும் வகையிலோ எவரும் இறுதி நேர பிரசாரங்களை மேற்கொள்ளக் கூடாது.

இதேவேளை நீதி நியாயமான தேர்தல் நடைபெற வேண்டுமானால் அதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குவது அவசியமானதாகும்.  ஏலவே இடம்பெற்ற ஓரிரு வன்செயல்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. எனவே கட்சித் தலைவர்கள் தங்கள் ஆதரவாளர்களை தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22