தலங்கம - கொஸ்வத்த ஹீனட்கும்புர பிரதேசத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோயின் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் 30 கிராம் ஐஸ் போதைப்பொருளும் 10 கிராம் 50 மில்லி கிராம் அளவில் பிரிதொரு போதைப்பொருளொன்றும் , கையடக்க தொலைபேசிகள் நான்கும், இலத்திரனியல் தராசுகள் இரண்டும், 20 ஆயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.