சீனாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 43 பேருக்கு புதிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சீனாவில் குறைந்து கொண்டு சென்ற கொரோனா தொற்று தற்போது மேலும் அதிகரித்து வருகின்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவின் பெரும்பாலான கொரோனா தொற்றாளார்கள் அந்நாட்டடின் வடமேற்கு பிரதேசமான ஜின்ஜியாங்கில் பதிவாகுவதாகவும் அந்நட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை அந்நாட்டில் கொரோனாவினால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 84,428 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச கொரோனா மதிப்பீட்டு பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.