மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 319 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 6 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரையான காலப் பகுதியிலேயே இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் பெரும்பாலானோர் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காகவே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக பொரலஸ்கமுவவில் ஒரு கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் பெண் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.