தலிபானுடனான போர்நிறுத்தத்தின் மூன்றாவது மற்றும் கடைசி நாளில், ஆப்கானிஸ்தான் அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை, போராளிக் குழுவின் 300 க்கும் மேற்பட்ட கைதிகளை விடுதலை செய்துள்ளது.

அதன்படி ஆப்கானிஸ்தானின் பர்வான் மற்றும் பிற மாகாண சிறைகளிலிருந்து 317  தலிபான் கைதிகளை அரசாங்கம் விடுவித்துள்ளது. இதன் மூலம் மொத்தமாக 4,917 தலிபானியர்கள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு தேசிய பாதுகாப்பு கவுன்சில் அலுவலகம் (ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

பெப்ரவரியில் கைச்சாத்திடப்பட்ட அமெரிக்க-தலிபான் சமாதான உடன்படிக்கைக்கு அமைவாக 5000 க்கும் மேற்பட்ட தலிபான் கைதிகளை விடுவிக்க ஆப்கானிஸ்தான் அராசங்கம் இணக்கம் தெரிவித்தது. 

அதன் அடிப்படையிலேயே தற்போது இந்த விடுவிப்பு பணிகள் இடம்பெற்று வருகிறது.

வெள்ளிக்கிழமை தொடங்கிய மூன்று நாள் முஸ்லீம் ஈத் அல்-ஆதா திருவிழாவின் போது கிளர்ச்சியாளர்கள் ஆச்சரியமான போர்நிறுத்தத்தை அறிவித்தனர்.

2020 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் 3,458 பொதுமக்கள் உயிரிழந்தனர், மேலும் 1,282 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2,176 பேர் காயமடைந்தும் உள்ளதாக ஐ.நா.வின் புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.