ஐ.பி.எல். 2020 லீக் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் நவம்பர் 10 வரை

Published By: Vishnu

03 Aug, 2020 | 08:36 AM
image

ஒத்திவைக்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக்கை (ஐ.பி.எல்) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்துவதற்கு இந்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இறுதி அனுமதி விரைவில் வரும் என்று  ஐ.பி.எல். நிர்வாக சபைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. 

அதன்படி இப் போட்டிகள் இது செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் நடைபெறும் என ஐ.பி.எல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்திருந்தார்.

எனினும் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 2 ஆம் திகதி (நேற்று) நடைபெறும் ஐ.பி.எல் ஆட்சி மன்றக் குழுவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இன்று ஐ.பி.எல் ஆட்சி மன்றக்குழு நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு ஐக்கிய அரபு எமீரகத்தில் போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்து விட்டதாகவும், போட்டி செப்டம்பர் 19 ஆம் திகதி தொடங்கி நவம்பர் 10 ஆம் திகதி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் 26 ஆம் திகதி இந்திய வீரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புறப்படுவார்கள், போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெண்கள் ஐ.பி.எல் லீக்கிற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35