சர்வதேச வியாபாரத்துடன் போட்டியிடுகின்ற நாடாக இலங்கையை கட்டியெழுப்பப்படும் - அம்பாந்தோட்டையில் ஜனாதிபதி தெரிவிப்பு

02 Aug, 2020 | 08:56 PM
image

(எம்.மனோசித்ரா)

சர்வதேச வியாபாரத்துடன் போட்டியிடுகின்ற நாடாக இலங்கையை கட்டியெழுப்பப்படும். இந்த இலக்கை அடைவதற்காக சர்வதேச தொடர்பு மத்திய நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ' நான்கு பாரிய நகர ' திட்டத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தையும் இணைப்பதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

 ஞாயிற்றுக்கிழமை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை நான்கு பாரிய வர்த்தக நகர திட்டத்தில் உள்வாங்கப்படும் ஏனைய மாவட்டங்களாகும். நான்கு பாரிய நகரங்களில் துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை மையப்படுத்தி ' சி வடிவம் ' கொண்ட பொருளாதார கொரிடோவை நிர்மாணித்து சர்வதேச வியாபாரத்துடன் போட்டியிடுகின்ற நாடாக இலங்கையை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

குடிநீர் பிரச்சினை மற்றும் காட்டு யானை அச்சுறுத்தல்களுக்கு தீர்வாக முறையான மற்றும் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாக லுனுகம்வெஹெர பேருந்து தரிப்பிட வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போது ஜனாதிபதி தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிக்குமாறு சூரியவௌ நகரின் பொதுச் சந்தைக்கு அருகில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதியிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00