நாளை கூடுகிறது அரசியலமைப்பு பேரவை

02 Aug, 2020 | 08:12 PM
image

அரசியலமைப்பு பேரவையின் கூட்டம் அதன் தலைவரும், எட்டாவது பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தலைமையில் நாளை (03) நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  உள்ளிட்ட அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் அரச சேவை ஆணைக்குழு ஆகியவற்றில் காணப்படும் வெற்றிடங்கள் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக அரசியலமைப்பு பேரவையின் செயலாளரும், பாராளுமன்ற செயலாளர் நாயகமுமான தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

மேலும், நிதி ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு மற்றும் தேசிய கொள்வனவு ஆணைக்குழு ஆகியவற்றினால் முன்வைக்கப்பட்டுள்ள காலாண்டு முன்னேற்ற அறிக்கைகள் இதன்போது மதிப்பீடு செய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38