இங்கிலாந்தின் லண்டனில் இடம்பெற்றுவரும் கிராண்ட்ஸ்லாம் விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் ரொஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

நேற்று (08) இடம்பெற்ற அரையிறுதிப்போட்டியில் தரவரிசைப்பட்டியலில் 3 ஆவது இடத்தில் இருக்கும் பெடரர் மற்றும் 7 ஆவது இடத்தை வகிக்கும் கனடாவின் ரவோனிக் ஆகியோர் மோதினர்.

இந்த போட்டியில் முதல் செட்டை ரவோனிக் 6-3 என கைப்பற்றினார்.

பின்பு சிறப்பாக விளையாடிய பெடரர் 7-6 மற்றும் 6-4 என இரண்டு செட்களை அடுத்தடுத்து கைப்பற்றினார்.

எனினும் அடுத்த இரண்டு செட்களையும் ரவோனிக் 7-5 மற்றும் 6-3 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை பெற்றுக்கொண்டார்.

பெடரர் அதிர்ச்சி தோல்வியுடன் போட்டியிலிருந்து வெளியேறினார்.

ரவோனிக் விம்பிள்டன் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ள முதல் கனேடிய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.