கொழும்பு துறைமுக ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு!

02 Aug, 2020 | 07:09 PM
image

(எம்.மனோசித்ரா)

கொழும்பு துறைமுக ஊழியர்கள் கடந்த சில தினங்களாக முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக துறைமுக சுதந்திர ஊழியர் சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுதரகே தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க வேண்டாம் எனவும் அதன் நடவடிக்கைகளை துறைமுகங்கள் அதிகார சபையின் கீழ் கொண்டுவருவமாறும் கோரி, துறைமுக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டிருந்தனர்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்குமுனையை பாதுப்பதற்கான ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினரால் கடந்த சில தினங்களாக சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்குமுனையத்தை விற்க வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து சத்தியாகிரக போராட்டம் கடந்த புதன் கிழமை ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது கோரிக்கையை முன்வைத்து துறைமுகத்திற்கு முன்பாக பாரிய ஆர்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்திற்கு 23 தொழிற்சங்கங்கள் ஆதரவளித்திருந்தன.  துறைமுகத்தில் பணியில் ஈடுப்பட்டிருந்த தொழிற்சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். எனினும் நேற்றைய தினமே இவ்விடயத்தில் பிரதமர் கவனம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14 வயது சிறுமிகள் இருவர் பாலியல்...

2024-10-05 17:12:37
news-image

வெலிகந்தையில் மாடுகள் திருட்டு ; சந்தேக...

2024-10-05 16:36:58
news-image

பெண் வேட்பாளர்களை அடையாளம் காணுவதில் கடினமாக...

2024-10-05 16:35:02
news-image

எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படட...

2024-10-05 16:37:16
news-image

புத்தளம் - சிலாபம் வீதியில் விபத்து...

2024-10-05 16:26:30
news-image

சிறையிலுள்ள கணவனுக்கு தேங்காய் சம்பலில் போதைப்பொருளை...

2024-10-05 16:00:33
news-image

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூட்டணியாக கேஸ்...

2024-10-05 15:37:37
news-image

பியூமி ஹன்சமாலியின் சொகுசு வாகனம் தொடர்பில்...

2024-10-05 16:24:12
news-image

தம்புள்ளையில் அனுமதிப்பத்திரமின்றி இறைச்சி விற்பனை செய்தவர்...

2024-10-05 15:46:39
news-image

அரச புலனாய்வு சேவைக்கு புதிய பணிப்பாளர்...

2024-10-05 15:18:19
news-image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர்கள்...

2024-10-05 15:39:30
news-image

பாராளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக ஈழவர்...

2024-10-05 14:53:38