நீர்கொழும்பு சிறைச்சாலையின் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட முன்னாள் அத்தியட்சகர் சிறைச்சாலை கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்கிய குற்றச்சாட்டில் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே அவர் இன்று குருநாகலில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையிலேயே நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அநுருத்த சம்பாயோ இவ்வாறு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.