டிக்கோயா நகர சபையின் அசமந்தம் ; சுகாதார சீர்கேடு நிலவுவதாக மக்கள் விசனம்

By T Yuwaraj

02 Aug, 2020 | 05:07 PM
image

ஹட்டன் டிக்கோயா நகர சபையால் சுத்தம் செய்ய வேண்டிய ஹட்டன் பஸ் தரிப்பிட பகுதிக்கு பின்பகுதியில் உள்ள அரசமீன் கூட்டுதாபனத்தின் அருகில் உள்ள சகல வர்த்தக நிலைய பகுதியில் கழிவு நீர் வடிந்து செல்வதாலும் குப்பைகளை சேமித்து வைப்பதாலும் பாரிய சுகாதார சீர்கேடு நிலவி வருவதாக அப்பகுதியில் உள்ள வர்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தற்போது மலையக பகுதியில் நிலவி வரும் காலநிலை மாற்றத்தால் அதிகமான கழிவு நீர் வெளியேறுவதுடன் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பாரிய இன்னலுக்குள்ளாவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் அவர்கள் கூறுகையில் ஹட்டன் டிக்கோயா நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வடிகால்களும் அகல, ஆழ படுத்துவதன் மூலம் இவ்வாறான கழிவு நீர் வெளியேறுவதை தடுக்கலாம்.

கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட வடிகால்களே தற்போதும் உள்ளது. வடிகால்களில் குப்பைகள் கழிவுகள் கொட்டுவதாலும் ஆங்காங்கே குப்பைகளை சேமித்து வைப்பதாலும் இவ்வாறான நிலை தோன்றுவதாகவும் சம்பந்தப்பட்ட நகர சபை முன்வந்து எதிர்கால நலன் பேண முன்வருமாறும் வடிகால்கள் மீள்பரிசிலனை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right