பொதுஜனபெரமுனவில் போட்டியிடும் எனக்கு நீங்கள் வாக்களிக்க விரும்பாத பட்சத்தில் உங்களுக்கு இருக்கும் அடுத்த ஒரேயொரு தெரிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் சிரேஷ்ட அரசியல்வாதியுமான இரா.சம்பந்தனே என்று சுசந்த புஞ்சிலமே தெரிவித்துள்ளார். 

திருகோணமலையில் லிங்கநகரிலும், முதூரில் லிங்கபுரத்திலும் நடைபெற்ற இருவேறு தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அந்தக் கூட்டங்களின்போது, நான் மக்களுக்கான சேவையை தொடர்வதற்கான அங்கீகாரத்தினை கோரிநிற்கின்றேன். சிலவேளைகளில் எனக்கு தாங்கள் வாக்களிக்க விரும்பாதிருப்பீர்களானால் உங்களது அடுத்த தெரிவாக சிரேஷ்ட அரசியல்வாதியான சம்பந்தனாகவே இருக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார். 

அவர் எனது தந்தை புஞ்சிலமேயின் நெருங்கிய நண்பர். அவர்கள் இருவரும் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது இந்த மாவட்டத்திலிருந்து ஒன்றாக பாராளுமன்றத்திற்கு சென்றவர்களாக இருக்கின்றார்கள். ஆகவே அவர்களின் நீண்ட மக்கள் சேவையும், அரசியல் அனுபவமும் இன்றியமையாதவொன்றாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தனும், எனது தந்தையாரும், இன,மத, மொழி பேதங்களைக் கடந்து ஒன்றிணைந்து மக்கள் சேவைகள் பலவற்றை முன்னெடுத்தள்ளார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.