பெலியத்த துப்பாக்கிச் சூட்டில் பெண் பலி !

By R. Kalaichelvan

02 Aug, 2020 | 12:04 PM
image

பெலியத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு குறித்த சம்பவம் இன்று காலை பெலியத்த - தம்முல்லை  பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை சம்பவத்தில் உயிரிழந்த நபர் 52 வயதுடையவர் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளதோடு , துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right