ஆளும் தரப்பின் தயவில் வாழ்ந்து வருபவரே ரணில் - சுஜீவ சேனசிங்க குற்றச்சாட்டு

02 Aug, 2020 | 12:01 PM
image

(செ.தேன்மொழி)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தோல்வியடையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்  ' இன்றிலிருந்து ஆரம்பிப்போம், புதிதாக சிந்திப்போம் ' என்றுக் கூறியே கட்சியை வீழ்ச்சியின் பாதைக்கு கொண்டு சென்றுள்ளார் என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சுஜீவ சேனசிங்க , ரணில் எப்போதுமே கட்சியை தோல்வியடையச் செய்து ஆளும் தரப்பின் தயவில் வாழ்ந்து வருபவர் என்றும் குற்றஞ்சாட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

மக்கள் இன்று பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர். பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டங்களும் இல்லை. இந்நிலையில் மொட்டு அணிக்கு தங்களது வாக்குகளை பெற்றுக் கொடுக்க விரும்பாதவர்கள் தயவு செய்து ஐக்கிய தேசிய கட்சிக்கு அந்த வாக்குகளை வழங்காதீர்கள். ஏன் என்றால் அவர்கள் இரசாங்கத்தின் தயவில் வாழ்ந்து வருபவர்கள்.

ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஒவ்வொரு முறை தோல்வியடையும் போதும் ' இன்றிலிருந்தே ஆரம்பிப்போம், புதிதாக சிந்திப்போம் ' என்று எங்களுக்கு கூறி எம்மை உற்சாகப்படுத்துவார். இவ்வாறு கூறிதான் அவர் முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்கவை தோல்வியடையச் செய்தார் , முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்கவை வெற்றிப் பெறச் செய்தார். நூறுக்கும் அதிகமான கட்சி உறுப்பினர்களை கட்சியை விட்டு வெளியேறுவதற்கும் வழிவகுத்துள்ளார்.

அவர் எப்போதுமே கட்சிக்கு தோல்வியை பெற்றுக் கொடுத்து விட்டு அரசாங்களத்தின் தயவில் வாழ்ந்து வருபவர். இதனால் மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இன்னமும் சிலர் வருமானம் இன்றி பாதிப்படைந்துள்ளனர். இதேவேளை துறைமுக ஓழியர்கள் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் விபனை செய்ய வேண்டாம் என்று குறிப்பிட்டு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

தேசப்பற்று என்று கூறிக்கொண்டு தமிழ் மற்றும் சிங்கள மக்களிடம் நாங்கள் சண்டையிட்டு கொள்கையில் நீங்கள் சீனாவுக்கும் , இந்தியாவுக்கும் இலங்கையை விற்பனை செய்யுங்கள் என்று துறைமுக ஊழியர்கள் அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளனர். இதுதான் இவர்களது திட்டம். தற்போது கலாசார மத்திய நிதியம் தொடர்பில் புதிய அத்தியாம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் எந்தத தேரராவது பேசினார்களா? இது ஏன் தெரியுமா? ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாச அந்த நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதில்லை. விகாரைகளின் கட்டுமான பணிகளுக்கே அவற்றை செலவிட்டுள்ளார்.

என்னை பொருத்தமட்டில் எந்தவித டீல் அரசியல் செயற்பாடும் இல்லாதா , மோசடிகளில் ஈடுப்படத தலைவர்தான் சஜித் பிரேமதாச என்பவர் . அவருக்கு எதிராக எத்தகைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும். அவர் அவரது செயற்பாடுகள் தொடர்பில் தகுந்த ஆதராங்களை வைத்துக் கொண்டுள்ளார். ஐ.தே.க.வின் டீல் அரசியல்வாதிகள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸவின் பதவியேற்பு நிகழ்வின் போது எந்தவித அழைப்பும் இன்றி அதில் கலந்துக் கொண்ட போதே அவர்களது செயற்பாடுகள் தொடர்பில் நாம் விளக்கம் பெற்றுக் கொண்டுள்ளோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை...

2025-02-15 17:53:42
news-image

ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறைக்கான ஆணையை வலுப்படுத்த...

2025-02-15 17:54:48
news-image

சட்டமா அதிபரின் ஆலோசனையை தற்காலிகமாக இடைநிறுத்துவது...

2025-02-15 20:32:09
news-image

இன்றைய வானிலை

2025-02-16 06:19:25
news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46