காலி பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள கால்வாய் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்தின் பிரேத பரிசோதனைகள் நிறைவுபெற்ற நிலையில் மேலதிக பரிசோதணைகளுக்காக சடலம் கராபிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சடலம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.