அனுமதி பத்திரம் இன்றி இயங்கி வந்த சில நிறுவனங்கள் இன்று காலை பொலிஸாரினால் முற்றுகை இடப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் நீர்க்கொழும்பு , தலங்கம ஆகிய பகுதிகளிலேயே கொரோனா அச்சுறுத்தல்கள் காணப்படும் நிலையில் இவ்வாறு சட்டவிரோதமாக அனுமதி பத்திரமின்றி இயங்கி வந்த  சில மாசாஜ் நிலையங்கள்  முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை சட்டவிரோதமாக குறித்த நிலையங்களில் பணியாற்றிய 14 பெண்கள் உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு இன்று காலை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருட்களுடன் 345 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.