469,000 அமெரிக்க டொலர்கள் உட்பட 390 மில்லியன் ரூபா அளவிலான ஹெரோயின் மோசடிகளில் ஈடுபட்ட பல நபர்களின் வங்கிக் கணக்கு விபரங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மோசடியில் ஈடுபட்ட நால்வரை மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினர் ராஜகிரிய, பத்தரமுல்ல மற்றும் பெல்வத்தை பகுதிகளில் நேற்றைய தினம் கைதுசெய்தும் உள்ளனர்.

வவுனியா, பன்னிபிட்டிய, புறக்கோட்டை மற்றும் பத்தரமுல்லை பகுதிகளைச் சேர்ந்த 32,38 மற்றும் 42 வயதுடைய நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த நான்கு சந்தேக நபர்களும் கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.