கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 373 இலங்கையர்களும், 13 வெளிநாட்டு மாலுமிகளும் மூன்று விமானங்களின் மூலமாக இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அதன்படி துபாயிருந்து எமிரேட்ஸ் ஈ.கே.-648 என்ற விமானத்தின் மூலமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸல் வேலை செய்த 332 இலங்கையர்கள் இன்று அதிகாலை 2.15 மணிக்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்களுள் நான்கு சிறிய குழந்தைகளும் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அதிகாலை 4.15 மணியளவில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து இலங்கை எயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யு.எல் -504 என்ற விமானமும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த விமானத்தில் வேலை மற்றும் வேலைக்காக சென்ற 41 இலங்கையர்கள் வருகை தந்தனர்.

இதற்கிடையில் 13 வெளிநாட்டு மாலுமிகளுடன் கட்டாரிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் விமானத்தினூடாக நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்நத பயணிகள் அனைவரும் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.