கொழும்பு, மெகசின் சிறைச்சாலைக்கு அருகே சிறை அதிகாரிகளினால் பூனையொன்று பிடிக்கப்பட்டுள்ளது.

பூனையின் கழுத்தில் 1.7 கிராம் ஹெரோயின், இரண்டு சிம்  அட்டைகள் மற்றும் நினைவக அட்டை (memory card) கட்டப்பட்டிருந்த நிலையிலேயே இந்த பூனை சிறைச்சாலை அதிகாரிகளினால் பிடிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய குறித்த பூனை பிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.