(எம்.மனோசித்ரா)

பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடவிருந்த மற்றொரு வேட்பாளர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடுதற்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்த அச்சிர இலங்கமக என்ற வேட்பாளரே இவ்வாறு கட்சி தாவியுள்ளார்.

இவர் இன்று சனிக்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்து பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டுள்ளார்.

மாத்தறை மாவட்டத்தில் போட்டிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்து பின்னர் கட்சி மாறிய மூன்றாவது வேட்பாளர் இவர் ஆவார்.

இவருக்கு முன்னர் சந்தன பிரியந்த மற்றும் எஸ்.டபிள்யு.பிரேமரத்ன ஆகிய ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர்களும் இவ்வாறு பொதுஜன பெரமுவில் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.