இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் துறைமுகத்தில் பாரம் தூக்கி சரிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட பாரம் தூக்கியை பரிசோதனை செய்த போது சரிந்துவிழுந்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள், ஆம்பியூலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்துஸ்தான் துறைமுகத்தில் இடம்பெற்ற முதலாவது விபத்து இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.