அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் இரு சிறிய ரக விமானங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சால்டோட்னா விமான நிலையம் அருகே நடுவானில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் விமானத்தை தனியாக ஓட்டிச்சென்ற 64 வதுயடைய அலாஸ்கா மாகாண உறுப்பினர் கேரி நோப் உயிரிழந்துள்ளார்.

மற்றொரு விமானத்தில் இருந்த 4 சுற்றுலா பயணிகள், வழிகாட்டி, விமானி என 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் சால்டோட்னாவைச் சேர்ந்த பைலட் கிரிகோரி பெல்(57), கன்சாஸைச் சேர்ந்த டேவிட் ரோஜர்ஸ் (40), தென் கரோலினாவைச் சேர்ந்த காலேப் ஹல்சி(26), ஹீதர் ஹல்சி(25), ஓல்ட் மேக்கே ஹல்சி(24) மற்றும் கிர்ஸ்டின் ரைட் (23) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

விபத்து குறித்து எப்.ஏ.ஏ மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரித்து வருகின்றன.

அலாஸ்கா மாகாணத்தில் கெட்சிகன் என்னுமிடத்தில் 2019 மே மாதம் நடுவானில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். குறித்த விபத்தில் 10 பேர் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.