நடிகை பிரியா ஆனந்த் வலைதள தொடர் ஒன்றில் நடிக்கிறார். இதன் மூலம் டிஜிற்றல் தள நடிகைகளின் பட்டியலில் இவரும் இணைந்திருக்கிறார்.

'வாமனன்' என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். 

இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'எல். கே. ஜி.' வணிக ரீதியாகவும் வெற்றி பெற்று, இவரை பிரபலபடுத்தியது. 

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். 

இதுவரை 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர், தற்போது முதன் முதலாக வலைதள தொடர் ஒன்றில் நடிக்க தொடங்கியிருக்கிறார். 

இயக்குனர் சச்சின் பதக் இயக்கத்தில் தயாராகிவரும் 'சிம்பிள் மர்டர் ' என்ற வலைதள தொடரில் அவர் நடித்து வருகிறார்.

இந்தத் தொடர் சோனி டிஜிற்றல் தளத்தில் இந்தியில் வெளியாகிறது. விரைவில் இந்த தொடர் தமிழில் டப் செய்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.