திருகோணமலை - குச்சவெளி சலப்பையாற்று பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியகியுள்ளார்.

நேற்று (8) மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று சிக்குண்டு, மின்கம்பத்தில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

21 வயதான நாசிக்குடா பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை குறித்த விபத்தில் காயமடைந்த மேலும் மூவரை பொலிஸார் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த மோட்டார் சைக்கிளிள் பயணித்தவர்கள் நால்வரும் நண்பர்களென விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.