அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தின் அடித்தள பகுதியில்  துப்பாக்கியுடன்  பெண் ஒருவர் நேற்று நுழைந்தமையால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் கட்டிடத்தை சுற்றி வளைத்ததையடுத்து, பாராளுமன்ற கட்டிடமும், அதையொட்டி அமைந்துள்ள பாராளுமன்ற பார்வையாளர் மையமும் மூடப்பட்டன. 

வெளியில் இருந்து யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. எனினும் தீவிர தேடுதல் நடவடிக்கையின் பின்னரும் குறித்த பெண் சிக்கவில்லை.

ஒரு மணி நேரத்துக்கு பிறகு, பொலிஸாரின் அனுமதியுடன்  பாராளுமன்ற கட்டிடம் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த பரபரப்புக்கு இடையே சபை சிறிது நேரம் நடைபெற்று ஒத்திவைக்கப்பட்டது.