விஜய் சேதுபதியின் 'துக்ளக் தர்பார்' சிங்கிள் ட்ராக் வெளியீட்டு திகதி அறிவிப்பு

01 Aug, 2020 | 07:51 AM
image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் 'துக்ளக் தர்பார்' என்ற படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய திரைப்படம் 'துக்ளக் தர்பார்'. 

இப்படத்தில் விஜயசேதுபதியுடன் அதிதி ராவ் ஹையாத்ரி,  இரா. பார்த்திபன், மஞ்சிமா மோகன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

இயக்குனர் பாலாஜி தரணிதரன் வசனத்தை எழுத, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள். 

மனோஜ் பரமஹம்ச ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு,' 96 'பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். 

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித்குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கிறார்.

கோவிந்த் வசந்தா இசை அமைத்திருக்கும் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் 'அண்ணாத்தே சேதி..' என தொடங்கும் முதல் சிங்கிள் டிராக், எதிர்வரும் ஓகஸ்ட் மூன்றாம் திகதி திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே இந்தப்படத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி அரசியல்வாதியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35