ஆங்கில விவாத உலகக்கிண்ணம் என வர்ணிக்கப்படும் உலக பாடசாலைகள் விவாத போட்டியின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது இலங்கை தேசிய அணி.

இவ்வருடம் மெக்ஸிகோவில் இடம்பெறவிருந்த இந்தப்போட்டிகள் Covid19 தாக்கம் காரணமாக இம்முறை நிகழ்நிலையில் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்று அயர்லாந்துக்கு எதிராக இடம்பெற்ற அரையிறுதிப்போட்டியில் 7-0 எனும் விகிதத்தில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இவ்விறுதிப்போட்டி நடப்பு சாம்பியனான கனடா அணிக்கு எதிராக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நேரலையாக இடம்பெறவுள்ளது.