ராமர் கோவில் பூமி பூஜையை நேரில் காண அயோத்திக்கு பக்தர்கள் வரவேண்டாம் என்று அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

கோவில் கட்டும் பணிகளை நிர்வகிக்க 15 உறுப்பினர்களைக் கொண்ட, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது.  

கோவில் கட்டுவதற்கான நன்கொடை மற்றும் கட்டுமானப் பொருட்களை பல்வேறு தரப்பினரும் இந்த அறக்கட்டளைக்கு வழங்கி வருகின்றனர்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெற உள்ளது.

 இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்ட உள்ளார். 

இந்நிலையில், ராமர் கோவில்  பூமி பூஜை நடைபெறும் நிகழ்ச்சியை நேரில் காண பக்தர்கள் அயோத்திக்கு வர வேண்டாம் என ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனா தொற்று பரவாமல் தற்போது பக்தர்கள் கலந்து கொள்ள முடியாத சூழல் உள்ளது என்றும், அடிக்கல் நாட்டு விழா தொலைக்காட்சி மற்றும் இணைய தளத்தில் நேரலை செய்யப்படும் என்றும்,  தெரிவிக்கப்பட்டுள்ளது.