அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனமான அப்பிள் மீது ஐரோப்பிய தொலைத்தொடர்பு செயலியான டெலிகிராம் நிறுவனம் நம்பிக்கைஎதிர்ப்பு முறைப்பாட்டை பதிவு செய்துள்ளது.

அப்பிள் நிறுவனம் அப்ஸ் ஸ்டோருக்கு நிகராக மூன்றாம் நபர் தரவிறக்க மென்பொருட்களையும் அனுமதிக்க வேண்டும் எனக்கோரி ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளது.

அப்பிள் நிறுவனம் வேறு எந்த தரவிறக்க மென்பொருளையும் அனுமதிக்காமையால் ஏனைய செயலிகள் அனைத்தும் அவர்களுக்கு 30சதவீத பராமரிப்பு கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாகவும், அது வளர்ந்து வரும் செயலிகளுக்கு பெரும் பாதகமாக உள்ளதாகவும் இந்த வருமானத்தால் மாத்திரம் 1 பில்லியன் அமெரிக்க டொலர் வரையில் மாதாந்தம் பெற்றுக்கொள்வதாகவும் குற்றம் சாட்டுகிறது டெலிகிராம்.