அரசியல்வாதிகளும் கொரோனா சட்ட திட்டங்களும்

31 Jul, 2020 | 01:29 PM
image

நாட்டில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் மறுபுறம் கொரோனாவின் அச்சநிலையும் மேலோங்கியுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த தேர்தல் காலப்பகுதில் இந்த நடைமுறைகளை  மக்கள் பின்பற்றுகின்றார்களா என்பதை தாண்டி அனைவருக்கும் முன்னுதாரணமாக செயற்பட வேண்டிய அரசியல் பிரதிநிதிகளும் அரசியல் தலைவர்களும் எவ்வாறு நடந்துகொள்கின்றார்கள் என்பதே இங்கு கேள்விக்குறியாக உள்ளது.

குறிப்பாக கடந்த சில நாட்களாக நடைபெற்ற சில தேர்தல் பிரசாரங்களில் சமூக இடைவெளி என்பது பேசுபொருளாக மாத்திரமே காணப்பட்டது.

மேலும் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்ட ஆதரவாளர்களும், அரசியல் தலைவர்களும் முகக்கவசங்களை அணியாமல் ஒருவரை கட்டித் தழுவதும் கைகொடுப்பதுமாக செயற்பட்டனர்.  

நாட்டில் ஒரு விடயத்தை நடைமுறைப்படுத்தும் போது அது சாதாரண பிரஜைக்கு மாத்திரமோ அல்லது மாகாணங்களுக்கு மாத்திரமோ அல்ல. அதனை தாண்டி அனைத்து அரசியல் பிரமுகர்களும் கடைபிடிக்க வேண்டும்.

நாட்டின் தற்போதைய பாரதூரதன்மையைக் கருத்தில் கொண்டு அனைவரும் சிந்தித்து செயற்பட வேண்டும். அதனைவிடுத்து சுய நல அரசியல் நோக்கங்களுக்காக அப்பாவி மக்களை பகடைக்காயாக பயன்படுத்தினால் நாடு அதலபாதாளத்துக்கு சென்றுவிடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right