பொதுஜன பெரமுனவோடு இணைந்து மொட்டு சின்னத்தில் நுவரெலியாவில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்களான ஜீவன் தொண்டமான், மருதபாண்டி ராமேஸ்வரன், பழனி சக்திவேல் அகியோரை ஆதரித்து கொழும்பு சினி வேர்ல்ட் மண்டபத்தில் பிரச்சார கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்நிலையில் குறித்த பிரச்சார கூட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பெருந்திரளான  வர்த்தகர்கள், இளைஞர்களின் கூட்டம் அலைகடலென திரண்டு இ.தொ.காவின் வெற்றியை உறுதி செய்தனர்.

இதேவேளை குறித்த நிகழ்விற்கு வருகை தந்து தமது கரங்களை பலப்படுத்திய அனைவருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பாகவும் மலையக கலாச்சார ஒன்றியம் அமைப்பின் சார்பாகவும் இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.