கொழும்பு, முகத்துவாரம் காக்கைத் தீவு கடலில் நண்பர்களோடு சேர்ந்து குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் சற்றுமுன்னர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.

16 வயதுடைய இளைஞரே காணாமல் போயுள்ளார். அலையின் வேகம் கடுமையாக இருப்பதால் தேடுதல் பணிகளில் ஈடுபட முடியாமல் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.