கடலட்டை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் மீதான கட்டளை ஒத்திவைப்பு

Published By: Digital Desk 4

30 Jul, 2020 | 05:22 PM
image

நீதிமன்ற உத்தரவை மீறி வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டை மற்றும் சட்டத்துக்குப் புறம்பான தொழில்களில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் மீதான கட்டளை வரும் 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வழங்கப்படும் என்று பருத்தித்துறை நீதிமன்றம் தவணையிட்டது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனால் பருத்தித்துறை நீதிமன்றத்தில் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டது.

தடை உத்தரவை கடந்த வருடம் பெற்றிருந்த நிலையில் இவ்ருடம் மீண்டும் கடலட்டை தொழிலில் ஈடுபடுவதற்கு கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சால் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இதனை எதிர்த்து மீண்டும் கடந்த 19 ஆம் திகதி நீதிமன்றில் மீள் தடை உத்தரவை பெறுவதற்காக விண்ணப்பம் செய்யப்பட்டது.

வழக்கிற்கு நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் சமூகமளிக்காத காரணத்தால் வழக்கு இன்று வியாழக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

பருத்தித்துறை நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் மன்றில் முன்னிலையாகி தமது விளக்கத்தை மன்றுரைத்தனர்.

“உள்ளூர் கடற்தொழிலாளர்கள் சங்கங்கள் ஐந்து இதுதொடர்பான அனுமதியை வழங்க உரித்துடையன. அவற்றுக்கு எமது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு நீரியல் வளத் திணைக்களப் பணிப்பாளரால் தென்னிலங்கையைச் சேர்ந்த 57 மீனவர் படகுகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது” என்று நீரியல் வள அதிகாரிகள் மன்றுரைத்தனர்.

“கடந்த வருடமும் இவ்வாறு உரிமம் வழங்கப்பட்டது. அவர்கள் வந்து கடற்தொழிலில் ஈடுபட்டனர். எனினும் அவர்களுக்கு வழங்கிய உரிமத்தில் உள்ள உள்ளக முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி இந்த நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை வழங்கியிருந்தது.

அதன்பின்னர் வடமராட்சி கடற்பரப்பிலிருந்து தென்னிலங்கை மீனவர்கள் வெளியேறியிருந்தனர். அதனால் இந்த நீதிமன்றால் வழங்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு கட்டளை நீடிக்கப்படாமல் கைவிடப்பட்டுவிட்டது. எனவே அவ்வாறான கட்டளையை மீளவும் வழங்கவேண்டும்” என்று ஜனாதிபதி சட்டதரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றுரைத்தார்.

இருதரப்பு சமர்ப்பணங்களை ஆராய்ந்து கட்டளை வரும் ஓகஸ்ட் 4ஆம் திகதி வழங்கப்படும் என்று தவணையிட்ட நீதிமன்று, வழக்கை ஒத்திவைத்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47